ரோடு கிழக்கு தேர்தல் தமிழகத்தில் பல அரசியல் பரபரப்புகளை உருவாக்கிவருகிறது. ஈரோடு கிழக்கு தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகுதியைப் பெற தி.மு.க. முயற்சிசெய்து வருகிறது. தி.மு.க. நிற்குமானால் அங்கு வேட்பாளராக தே.மு.தி.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த சந்திரகுமார் நிற்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

a

அதற்கு அச்சாரமாக சந்திரகுமார் வீட்டு விஷேசத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். சில மாதங்களே இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நின்று சென்றமுறை பெற்ற ஐம்பதாயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தை அறுபதாயிரமாக உயர்த்தினால் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க.வின் இமேஜ் உயரும் என சீட்டை விட்டுத்தரச் சொல்லி காங்கிரசிடம் பேசும் தி.மு.க., ஈரோடு தொகுதிக்குப் பதிலாக வேறொரு தொகுதியை தருவதாகக் கூறி வருகிறது.

அ.தி.மு.க. முகாமில் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்கிற கருத்து மேலோங்கி நிற்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட்டால் பா.ஜ.க. கூட்டணியுடன் தான் போட்டியிட வேண்டும் என்கிற நிபந்தனையை பா.ஜ.க. முன்வைக்கிறது. டெல்லிக்கு தனது வழக்கு விவரங்களுக்காக சென்றுவந்த டி.டி.வி.தினகர னிடம், “"அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சேர வேண்டும் என்கிற நிபந் தனையை நாங்கள் வைத்தால் சரியாக இருக் காது. அது அ.தி.மு.க. விற்குள் நடந்த ஒரு விவாதமாக இருக்க வேண்டும் என்பதால் நீங்கள் அந்தக் கருத்தை முன்வையுங்கள்'” என பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். அதைக் கிளிப் பிள்ளை போல எதிரொலித் திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

Advertisment

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. சேராவிட்டால் அ.தி. மு.க. அழிந்துவிடும் என டி.டி.வி .தினகரன் சொன்னதற்குப் பதிலடியாக ஜெயக்குமார் எதிர்அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால், எடப்பாடி உட்பட மூத்த தலைவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. தமிழக பா.ஜ.க. தலைவர் ஆடுமலை.. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி இணைய வேண்டுமென திருவாய் மலர்ந் தருளியிருக்கிறார். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பேசி வந்த ஆடுமலை ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி எனச்சொன்ன ஆடுமலை கூட் டணியை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது அக்காள் கணவர் அசோக் குமாருக்கு நெருக்கமான செந்தில் என்பவர் வீட்டில் ssவருமான வரித்துறை ரெய்டு நடத்தப் புகுந்தது. செந்திலும் அசோக் குமாரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட ஆடுமலைக்கு பா.ஜ.க. மேலிடம் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை வைத்து பழனிக்குப் பக்கத்தில் ‘"அண்ணாமலையார் பிரிக்ஸ்'’ என்கிற செங்கல் தொழிற் சாலையை நடத்திவந்தனர்.

பா.ஜ.க. தலைவராகி ஆடுமலை சம்பாதித்த ஆயிரக் கணக்கான கோடி பணத்தை அசோக்குமாரும் ஆடுமலையின் மனைவி அகிலாவும்தான் கையாண்டுவந்தார்கள். அசோக்குமாருக்கு ‘ஆல் இன் ஆல்’ வலதுகையாக இயங்கி வந்தவர்தான் செந்தில். செந்தில் வீட்டில் புகுந்த வருமான வரித்துறை, ரூபாய் பத்து கோடி மதிப்புள்ள பல ஏலச்சீட்டுகளை நடத்தியதை அங்கிருந்த கணக்கு வழக்குகள் மூலம் கண்டு பிடித்தார்கள். எங்களிடம் ஏலச்சீட்டு சேர்ந்தால் வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசுத் துறைகளிடமிருந்து பாதுகாப் பளிப்போம் என நடத்தப்பட்டு வந்த ஏலச் சீட்டுகளின் விபரங்களை வருமான வரித் துறையே கண்டுபிடித்ததுதான் ஹைலைட். அத்துடன் உக்ரைன் நாட்டிலிருந்து செங்கல் தயாரிக்க நவீன இயந்திரம் ஒன்றை மத்திய அரசுக்குத் தெரியாமல் இறக்குமதி செய்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

செங்கல் தயாரிக்கத் தேவையான களிமண்ணை மணல் கடத்தலில் புகழ்பெற்ற கரிகாலனின் எஸ்.ஆர். கம்பெனி இலவச மாகவே அசோக்குமாருக்கு கொடுத்துள்ளது. அத்துடன் அசோக்குமார் எட்டரைக் கோடி ரூபாய்க்கு கோவையிலிருந்து கேரளாவின் நிலாம்பூர் செல்லும் சாலையில் நிலம் வாங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

Advertisment

சாதாரண செங்கல் வாங்கி விற்கும் தொழிலைச் செய்துவந்த செந்தில் நூற்றுக்கணக்கான கோடிகளை எப்படிக் கையாண் டார் என அவரிடம் கேட்டதற்கு, இதெல்லாம் ஆடுமலையின் பணம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆடுமலை லண்டனிலிருந்து வந்த பிறகு அவரது போக்கில் பெரிய மாற்றங்களை பா.ஜ.க. கண்டுபிடித்தது. அவர் ‘"கொங்குநாடு ஜனதா கட்சி'’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வந்தார். அதற்கு முதுகெலும்பாக ஒரு பெரும் நிதியைத் திரட்டி மனைவி அகிலா மூலமாக நிழலான கம்பெனிகளிலும், வெளிநாட்டிலும் முதலீடு செய்திருக்கிறார். அத்துடன் தொழில்வளம் மிகுந்த கோவைப் பகுதியில் தொழில் அதிபர்களுக்கு தேவைப்படும் பணத்தை சப்ளை செய்து வந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் வருமான வரித்துறையிடமிருந்து தப்பிக்க துண்டுச் சீட்டுக் களில் எழுதி செந்தில் மூலம் ஆடுமலையின் மச்சான் அசோக்குமார் ஆபரேட் செய்திருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்த டெல்லி மேலிடம் ஆடுமலையை அடக்கிவைக்க அவர் தனது எதிரிகளுக்காக ஏவும் வருமான வரித்துறையையே அவருக்கு எதிராக ஏவியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வந்து அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவேன் என்ற ஆடுமலையின் வாய்ச்சவடாலுக்கு இந்த ரெய்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வை வழிக்குக் கொண்டுவர அடுத்த அஸ்திரத்தை ஏவ பா.ஜ.க. தயாராகி வருகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓ.பி.எஸ்.சும், ஈ.பி.எஸ்.சும் தேர்தல் கமிஷனில் நேரடியாக ஆஜராகிறார்கள். எடப்பாடி, பா.ஜ.க. கூட்டணிக்கு ஓகே சொல்லவில்லையெனில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என தேர்தல் கமிஷன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பா.ஜ.க.வினர் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஆதரிக்கவேண்டுமென, சமூக வலைத்தளங்களில் சில புரோக்கர்களை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடி. ஆனால், எங்களுக்கும் ஈரோடு தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்கள் குறிவைத்தது 2026 சட்டமன்றத் தேர்தலைத்தான் என விஜய்யின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதம் நடைபெறப் போகும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் மார்ச் மாதம் வேலுமணியின் குடும்பத் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு டெல்லி பா.ஜ.க. உத்தரவின் அடிப்படையில் விஸ்வரூபம் எடுத்து அ.தி.மு.க.வை வேலுமணி உடைப்பார் என்ற அச்சமும் அ.தி.மு.க.வில் நிலவுகிறது.

“எடப்பாடி, ஆடுமலை ஆகியோரைச் சுற்றி களம் அமைத்து கூட்டணிக்கான வேலைகளை பா.ஜ.க. செய்துவருகிறது. இதற்கிடையே சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளும் வேலைகள், அதற்கான பேச்சுவார்த்தைகள் எடப்பாடியுடன் வேகமாக நடந்துவருவதாக சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படிச் சென்றாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற ஒன்றைத் தவிர அனைத்து வழிகளும் முட்டுச்சந்தாகவே இருப்பதைக் கண்டு எடப்பாடி திணறிவருகிறார். எடப்பாடி கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் ஒன்றிய அரசின் தாக்குதல்கள் வேகமாக இருக்கும்” என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

;;